• Nov 22 2024

போராட்டத்திற்கு நடுவில் தன்னைத் தானே தீ வைத்துக்கொண்ட விவசாயி: மருத்துவமனையில் அனுமதி..!!

Tamil nila / Feb 21st 2024, 9:23 pm
image

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் பகுதியில் விவசாயிகள் போராட்டத்திற்கு நடுவில் தன்னைத் தானே தீ வைத்துக் கொள்ள விவசாயி ஒருவர் முயன்றுள்ளார்.

சக போராட்டக்காரர்களால் தீ அணைக்கப்பட்டு அந்த விவசாயி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற இந்த போராட்டம் முசாபர்நகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சம்பவத்தையடுத்து மாநகர நீதிபதி விகாஸ் காஷ்யப், மருத்துவமனைக்குச் சென்று தீ காயத்துக்கு ஆளான பிரிஜ்பால் என்கிற விவசாயியைச் சந்தித்தார்.

கடன் சார்ந்த பிரச்னையால் இந்த முடிவுக்கு விவசாயி சென்றதாகவும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி் குறிப்பிட்டார்.

வேளாண் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் யோகேஷ் சர்மா, தற்கொலைக்கு முயன்ற விவசாயி தனது பிரச்னைக்கு எந்த தீர்வும் கிடைக்காததால் இந்த முடிவுக்குச் சென்றதாகவும் வங்கியில் பெறாத கடனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

குறைந்தபட்ச ஆதார விலை, லக்‌ஷ்மிபூரில் நடந்த வன்முறை சம்பவத்துக்கு நீதி, கரும்பு விலை உயர்வு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

பஞ்சாப்- ஹரியானாவில் போராடி வரும் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்திய உத்தர பிரதேச மாநில விவசாயிகள், தங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் இறங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


போராட்டத்திற்கு நடுவில் தன்னைத் தானே தீ வைத்துக்கொண்ட விவசாயி: மருத்துவமனையில் அனுமதி. உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் பகுதியில் விவசாயிகள் போராட்டத்திற்கு நடுவில் தன்னைத் தானே தீ வைத்துக் கொள்ள விவசாயி ஒருவர் முயன்றுள்ளார்.சக போராட்டக்காரர்களால் தீ அணைக்கப்பட்டு அந்த விவசாயி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.மேலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற இந்த போராட்டம் முசாபர்நகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.சம்பவத்தையடுத்து மாநகர நீதிபதி விகாஸ் காஷ்யப், மருத்துவமனைக்குச் சென்று தீ காயத்துக்கு ஆளான பிரிஜ்பால் என்கிற விவசாயியைச் சந்தித்தார்.கடன் சார்ந்த பிரச்னையால் இந்த முடிவுக்கு விவசாயி சென்றதாகவும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி் குறிப்பிட்டார்.வேளாண் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் யோகேஷ் சர்மா, தற்கொலைக்கு முயன்ற விவசாயி தனது பிரச்னைக்கு எந்த தீர்வும் கிடைக்காததால் இந்த முடிவுக்குச் சென்றதாகவும் வங்கியில் பெறாத கடனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.குறைந்தபட்ச ஆதார விலை, லக்‌ஷ்மிபூரில் நடந்த வன்முறை சம்பவத்துக்கு நீதி, கரும்பு விலை உயர்வு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.பஞ்சாப்- ஹரியானாவில் போராடி வரும் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்திய உத்தர பிரதேச மாநில விவசாயிகள், தங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் இறங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement