• May 19 2024

மியன்மார் மற்றும் ஆப்கானிஸ்தானில் இன்று உணரப்பட்ட நிலநடுக்கம்..!!

Tamil nila / Feb 21st 2024, 8:09 pm
image

Advertisement

மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

மியான்மரில் இன்று மதியம் 1.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 70 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மர் தலைநகர் நய்பிடாவ் அருகே சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் இந்தியாவின் கிழக்கு பகுதியிலும் உணரப்பட்டன. இதேபோல், ஆப்கானிஸ்தானிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு அதிகாலை 4.17 மணிக்கு 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இருநாடுகளிலும் நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் நிலநடுக்கம் காரணமாக உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


மியன்மார் மற்றும் ஆப்கானிஸ்தானில் இன்று உணரப்பட்ட நிலநடுக்கம். மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.மியான்மரில் இன்று மதியம் 1.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 70 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.மியான்மர் தலைநகர் நய்பிடாவ் அருகே சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் இந்தியாவின் கிழக்கு பகுதியிலும் உணரப்பட்டன. இதேபோல், ஆப்கானிஸ்தானிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு அதிகாலை 4.17 மணிக்கு 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இருநாடுகளிலும் நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் நிலநடுக்கம் காரணமாக உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement