• Oct 09 2024

காணி தகராறு காரணமாக வன்முறையில் ஈடுபட்ட குடும்பம்: ஐந்து பேர் டுகாயம்

Chithra / Sep 10th 2024, 2:40 pm
image

Advertisement

 

தென்னிலங்கையில் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

ஹிக்கடுவ பகுதியில் காணி தகராறு காரணமாக இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் வாள் மற்றும் பொல்லால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒரு தரப்பில் உள்ள இரு சகோதரர்களும் மற்றைய தரப்பில் தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரு சகோதரர்களும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றையவர்கள் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


காணி தகராறு காரணமாக வன்முறையில் ஈடுபட்ட குடும்பம்: ஐந்து பேர் டுகாயம்  தென்னிலங்கையில் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.ஹிக்கடுவ பகுதியில் காணி தகராறு காரணமாக இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் வாள் மற்றும் பொல்லால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அதற்கமைய ஒரு தரப்பில் உள்ள இரு சகோதரர்களும் மற்றைய தரப்பில் தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த இரு சகோதரர்களும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றையவர்கள் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த தாக்குதல் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement