மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து இன்று காலை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரு ஓயாவில் இன்று காலை 8.17 மணியளவில் விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.
இதன்போது ஹெலிகொப்டரில் இருந்த 12 பேர் மீட்கப்பட்டு பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விமானப்படை வீரர்கள் இருவரும், இராணுவ விசேட படையைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிங்குரக்கொடையில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 9 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
ஹெலிகொப்டர் விபத்து - 5 இராணுவ வீரர்கள் பலி விசாரணைக்கு 9 பேர் கொண்ட குழு நியமனம் மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து இன்று காலை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மதுரு ஓயாவில் இன்று காலை 8.17 மணியளவில் விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.இதன்போது ஹெலிகொப்டரில் இருந்த 12 பேர் மீட்கப்பட்டு பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் விமானப்படை வீரர்கள் இருவரும், இராணுவ விசேட படையைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹிங்குரக்கொடையில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 9 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.