• Aug 21 2025

சீனாவில் தீடீர் வெள்ளப்பெருக்கு ;10 பேர் உயிரிழப்பு- பலர் மாயம்!

shanuja / Aug 20th 2025, 9:50 am
image

சீனாவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த  கனமழையால்  மஞ்சள் நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


இந்த நிலையில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும், நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளதுடன் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


அதேவேளை  கனமழை, வெள்ளப்பெருக்கால் மின்சாரம், தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 


மேலும், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் தீடீர் வெள்ளப்பெருக்கு ;10 பேர் உயிரிழப்பு- பலர் மாயம் சீனாவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த  கனமழையால்  மஞ்சள் நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளதுடன் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.அதேவேளை  கனமழை, வெள்ளப்பெருக்கால் மின்சாரம், தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement