திருட்டு, குற்றச்செயல்கள் அதிகம் இடம்பெறும் இன்றைய காலகட்டத்தில் அனுராதபுரம் டிப்போவில் பணியாற்றும் சாரதி மற்றும் நடத்துநரின் செயல் அனைவரையும் நெகிழ்வடையச் செய்துள்ளது.
இதன்படி, அரச பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் 5 இலட்சம் ரூபா பணத்துடன் கூடிய பையையும் மடிக்கணனியையும் மறந்து விட்டு சென்றுள்ளார்.
இந் நிலையில் அவற்றை எடுத்த சாரதி மற்றும் நடத்துநர், அவரிடம் பத்திரமாக திருப்பிக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளையில் இருந்து அக்குறணை நோக்கி சென்ற அரச பேருந்தில் பயணி ஒருவரே பையை மறந்துவிட்டு இறங்கியுள்ளார்.
அந்த பையில் 5 லட்சம் ரூபாய் மற்றும் மடிக்கணனி இருந்துள்ளது.
பணம் மற்றும் மடிக்கணனியின் அடையாளத்தை சரிபார்த்த பின்னர், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் உரியவரிடம் அவற்றை மீண்டும் ஒப்படைக்க ஏற்பாடு செய்ததாக தெரியவருகின்றது.
இலங்கையில் சாரதி மற்றும் நடத்துநரின் நெகிழ்சி செயல். குவியும் பாராட்டு திருட்டு, குற்றச்செயல்கள் அதிகம் இடம்பெறும் இன்றைய காலகட்டத்தில் அனுராதபுரம் டிப்போவில் பணியாற்றும் சாரதி மற்றும் நடத்துநரின் செயல் அனைவரையும் நெகிழ்வடையச் செய்துள்ளது.இதன்படி, அரச பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் 5 இலட்சம் ரூபா பணத்துடன் கூடிய பையையும் மடிக்கணனியையும் மறந்து விட்டு சென்றுள்ளார்.இந் நிலையில் அவற்றை எடுத்த சாரதி மற்றும் நடத்துநர், அவரிடம் பத்திரமாக திருப்பிக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தம்புள்ளையில் இருந்து அக்குறணை நோக்கி சென்ற அரச பேருந்தில் பயணி ஒருவரே பையை மறந்துவிட்டு இறங்கியுள்ளார்.அந்த பையில் 5 லட்சம் ரூபாய் மற்றும் மடிக்கணனி இருந்துள்ளது.பணம் மற்றும் மடிக்கணனியின் அடையாளத்தை சரிபார்த்த பின்னர், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் உரியவரிடம் அவற்றை மீண்டும் ஒப்படைக்க ஏற்பாடு செய்ததாக தெரியவருகின்றது.