• Feb 15 2025

இலங்கை - பாகிஸ்தான் இடையே விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டம்..!

Chithra / May 31st 2024, 2:42 pm
image


கொழும்பில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு நேரடி விமான சேவையை தொடங்குவதன் மூலம் விமான தொடர்பை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கையும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது, ​​கொழும்பில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சிக்கு மட்டுமே நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானின் மத அலுவல்கள் மற்றும் சர்வமத நல்லிணக்க அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில், விமான சேவையை அதிகரிப்பதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது.


இலங்கை - பாகிஸ்தான் இடையே விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டம். கொழும்பில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு நேரடி விமான சேவையை தொடங்குவதன் மூலம் விமான தொடர்பை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கையும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தற்போது, ​​கொழும்பில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சிக்கு மட்டுமே நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானின் மத அலுவல்கள் மற்றும் சர்வமத நல்லிணக்க அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில், விமான சேவையை அதிகரிப்பதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement