தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்.தென்மராட்சி பிரதேசத்தின் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதேடு, வீடுகளுக்குள்ளும் வெள்ளம் உட்புகுந்துள்ளது.
தென்மராட்சி பிரதேசத்தின் கொடிகாமம் தெற்கு, கொடிகாமம் மத்தி மற்றும் பாலாவி வடக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்களே வெள்ள அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 34 குடும்பங்களை சேர்ந்த 132 பேர் தற்காலிக முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாலாவி வடக்கிலுள்ள கலைவாணி முன்பள்ளியில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 94 தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையின் வடக்கு கரையை அண்மித்து தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய யாழின் முக்கிய பகுதிகள் - 24 மணித்தியாலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்.தென்மராட்சி பிரதேசத்தின் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதேடு, வீடுகளுக்குள்ளும் வெள்ளம் உட்புகுந்துள்ளது.தென்மராட்சி பிரதேசத்தின் கொடிகாமம் தெற்கு, கொடிகாமம் மத்தி மற்றும் பாலாவி வடக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்களே வெள்ள அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுள் 34 குடும்பங்களை சேர்ந்த 132 பேர் தற்காலிக முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பாலாவி வடக்கிலுள்ள கலைவாணி முன்பள்ளியில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கொடிகாமம் போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 94 தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையின் வடக்கு கரையை அண்மித்து தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.