• Apr 30 2026

நாவலப்பிட்டி நகரில் மீண்டும் வெள்ளம் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Chithra / Apr 30th 2026, 9:06 pm
image

மத்திய மலைநாட்டு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக, நாவலப்பிட்டி நகரில் மீண்டும் வெள்ள நீர்  புகுந்துள்ளது.


நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் மாலை நேரங்களில் கடும் மழை பெய்து வருவதால், மலையகத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் தினசரி வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக நாவலப்பிட்டி நகரின் கண்டி – கம்பளை பிரதான வீதி மற்றும் பேருந்து தரிப்பிடம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் விளைவாக, பேருந்து நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு கழிவு நீருடன் கலந்து வெள்ள நீர் உட்புகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.


வெள்ளநீர் தேக்கம் காரணமாக வாகன சாரதிகள், நடத்துனர்கள், பாதசாரிகள், பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அப்பகுதியில் வியாபாரம் மேற்கொள்ளும் வர்த்தகர்கள் பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருகின்றனர்.


இந்த நிலைமையை விரைவாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நாவலப்பிட்டி நகரில் மீண்டும் வெள்ளம் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மத்திய மலைநாட்டு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக, நாவலப்பிட்டி நகரில் மீண்டும் வெள்ள நீர்  புகுந்துள்ளது.நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் மாலை நேரங்களில் கடும் மழை பெய்து வருவதால், மலையகத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் தினசரி வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக நாவலப்பிட்டி நகரின் கண்டி – கம்பளை பிரதான வீதி மற்றும் பேருந்து தரிப்பிடம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் விளைவாக, பேருந்து நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு கழிவு நீருடன் கலந்து வெள்ள நீர் உட்புகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.வெள்ளநீர் தேக்கம் காரணமாக வாகன சாரதிகள், நடத்துனர்கள், பாதசாரிகள், பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அப்பகுதியில் வியாபாரம் மேற்கொள்ளும் வர்த்தகர்கள் பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருகின்றனர்.இந்த நிலைமையை விரைவாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement