தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக கருணா ஜக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் பெண்களுக்கான கிராமிய விளையாட்டு நிகழ்வு சனிக்கிழமை (12) மாலை நடைபெற்றது.
இவ் விளையாட்டு நிகழ்வினை கிரான் அபிவிருத்தி சங்கம்,மகளீர் சங்கம் மற்றும் மட்டக்களப்பு தாயக செயலணி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது அன்னை பூபதியின் மகள் மங்கள விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் மரதன் ஒட்டம், அஞ்சல் ஓட்டம், கயிறு இழுத்தல், கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல் என பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
அத்துடன் அன்னை பூபதி பற்றிய பேச்சு மற்றும் கவிதை போட்டிகள் என்பனவும் நடைபெற்றது.
போட்டி நிகழ்சிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் அதிதிகளாக அருட்தந்தை ஜீவராசா, சிவில் செயற்பாட்டாளர் சிவயோகநாதன், மட்டக்களப்பு தாயகசெயணி இணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிராமிய விளையாட்டு நிகழ்வு தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக கருணா ஜக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் பெண்களுக்கான கிராமிய விளையாட்டு நிகழ்வு சனிக்கிழமை (12) மாலை நடைபெற்றது.இவ் விளையாட்டு நிகழ்வினை கிரான் அபிவிருத்தி சங்கம்,மகளீர் சங்கம் மற்றும் மட்டக்களப்பு தாயக செயலணி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்போது அன்னை பூபதியின் மகள் மங்கள விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.நிகழ்வில் மரதன் ஒட்டம், அஞ்சல் ஓட்டம், கயிறு இழுத்தல், கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல் என பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.அத்துடன் அன்னை பூபதி பற்றிய பேச்சு மற்றும் கவிதை போட்டிகள் என்பனவும் நடைபெற்றது.போட்டி நிகழ்சிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் அதிதிகளாக அருட்தந்தை ஜீவராசா, சிவில் செயற்பாட்டாளர் சிவயோகநாதன், மட்டக்களப்பு தாயகசெயணி இணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.