• Apr 14 2025

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

Chithra / Apr 13th 2025, 10:56 am
image

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கடவுச்சீட்டு விநியோகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் செயற்பாடு நண்பகல் 12 மணிவரை மட்டுமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாட்களில் ஒரு நாள் சேவைக்காக நடைமுறையில் உள்ள 24 மணி நேர சேவை நாட்களில் இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கடவுச்சீட்டு விநியோகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்கமைய எதிர்வரும் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் செயற்பாடு நண்பகல் 12 மணிவரை மட்டுமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட நாட்களில் ஒரு நாள் சேவைக்காக நடைமுறையில் உள்ள 24 மணி நேர சேவை நாட்களில் இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement