• Apr 14 2025

3ஆம் தர மாணவர்கள் மீது உலோக பெல்ட்டால் கொடூர தாக்குதல் - ஆசிரியர் தலைமறைவு

Chithra / Apr 13th 2025, 9:42 am
image

 

கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றின் ஆசிரியர், சிறுவர்களை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையகம் விசாரணையைத் ஆரம்பித்துள்ளது.

அறிக்கையின்படி, வகுப்பு ஆசிரியர் 3 ஆம் வகுப்பு மாணவர்களை உலோக பெல்ட்டால் அடித்து தண்டித்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணையின்போது, 7 வயதுடைய இரண்டு மாணவர்களிடமிருந்தும், சம்பந்தப்பட்ட பாடசாலையின் துணை அதிபர் மற்றும் பெற்றோரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள பதுளையைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த ஆசிரியரை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

3ஆம் தர மாணவர்கள் மீது உலோக பெல்ட்டால் கொடூர தாக்குதல் - ஆசிரியர் தலைமறைவு  கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றின் ஆசிரியர், சிறுவர்களை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையகம் விசாரணையைத் ஆரம்பித்துள்ளது.அறிக்கையின்படி, வகுப்பு ஆசிரியர் 3 ஆம் வகுப்பு மாணவர்களை உலோக பெல்ட்டால் அடித்து தண்டித்ததாகக் கூறப்படுகிறது.விசாரணையின்போது, 7 வயதுடைய இரண்டு மாணவர்களிடமிருந்தும், சம்பந்தப்பட்ட பாடசாலையின் துணை அதிபர் மற்றும் பெற்றோரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.எனினும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள பதுளையைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து அந்த ஆசிரியரை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement