• Nov 22 2024

யாழில் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும்..!

Sharmi / Jul 24th 2024, 9:06 am
image

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் நடாத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் (23) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர்,

உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் ஆவணி மாதம் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தின் பண்ணை சுற்றாடலில் நடைபெறவுள்ளது எனவும், ஆவணி மாதம் 5 ஆம் திகதி பி.ப 3.00 மணி தொடக்கம் மாலை 9.00 வரையும், 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் யாழ் மாவட்டத்திலுள்ள 85 தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் .

 உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களை வலுப்படுத்தும் வகையில் இவ் உணவுத் திருவிழா அமையவுள்ளதாகவம், இளம் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்கள் இந்த வாய்ப்பை சரியான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுக் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், யாழ்ப்பாண மாவட்ட தொழில் முயற்சியாளர்கள் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யும் வகையில் வளர்ச்சியடைந்து வருகின்றனர் எனவும், இவர்களின் உற்பத்திகளை வெளிநாட்டவர் தேடி வந்து பெற்றுக்கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் மேற்படி உணவுத் திருவிழாவில் தரமான மற்றும் சுவையான உணவுகளை பெற்று உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்போது இசை நிகழ்வுகள். நாடக நிகழ்வுகள் மற்றும் பொம்மலாட்டம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் நடாத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் (23) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர்,உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் ஆவணி மாதம் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தின் பண்ணை சுற்றாடலில் நடைபெறவுள்ளது எனவும், ஆவணி மாதம் 5 ஆம் திகதி பி.ப 3.00 மணி தொடக்கம் மாலை 9.00 வரையும், 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் யாழ் மாவட்டத்திலுள்ள 85 தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் . உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களை வலுப்படுத்தும் வகையில் இவ் உணவுத் திருவிழா அமையவுள்ளதாகவம், இளம் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்கள் இந்த வாய்ப்பை சரியான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுக் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், யாழ்ப்பாண மாவட்ட தொழில் முயற்சியாளர்கள் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யும் வகையில் வளர்ச்சியடைந்து வருகின்றனர் எனவும், இவர்களின் உற்பத்திகளை வெளிநாட்டவர் தேடி வந்து பெற்றுக்கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.மேலும் மேற்படி உணவுத் திருவிழாவில் தரமான மற்றும் சுவையான உணவுகளை பெற்று உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்போது இசை நிகழ்வுகள். நாடக நிகழ்வுகள் மற்றும் பொம்மலாட்டம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement