• Dec 03 2024

நிவாரணம் வழங்கவில்லை என : சமூக செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள்வெட்டு !

Tharmini / Dec 2nd 2024, 1:21 pm
image

நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி வடமராட்சி கிழக்கு வத்திராயனில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உறவினர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (30) இரவு 08.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் வசிக்கும் சமூக நலன் சார் செயற்பாட்டாளர் ஒருவர் கடந்த வெள்ள அன்ர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அதே கிராமத்தை சேர்ந்த மது போதையில் சென்ற நபர் ஒருவர் தனக்கு நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக செயற்பாட்டாளரின் உறவினர் ஒருவரை அந்த சமூக செயற்பாட்டாளர் என்று  நினைத்து வாளினால் வெட்ட முயன்றுள்ளார்.

அதனை தடுக்க முயன்ற அவருக்கு கைகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

குறித்த உறவினர் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததை தொடர்ந்து மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிவாரணம் வழங்கவில்லை என : சமூக செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள்வெட்டு நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி வடமராட்சி கிழக்கு வத்திராயனில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உறவினர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (30) இரவு 08.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் வசிக்கும் சமூக நலன் சார் செயற்பாட்டாளர் ஒருவர் கடந்த வெள்ள அன்ர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார்.இதனால் கோபமடைந்த அதே கிராமத்தை சேர்ந்த மது போதையில் சென்ற நபர் ஒருவர் தனக்கு நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக செயற்பாட்டாளரின் உறவினர் ஒருவரை அந்த சமூக செயற்பாட்டாளர் என்று  நினைத்து வாளினால் வெட்ட முயன்றுள்ளார்.அதனை தடுக்க முயன்ற அவருக்கு கைகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.குறித்த உறவினர் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததை தொடர்ந்து மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement