• Jun 30 2024

இரண்டாவது நாளாக ஹட்டன் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஸ்தம்பிதம்...!

Sharmi / Jun 27th 2024, 9:07 am
image

Advertisement

ஹட்டன் வலய கல்வி திணைக்கள கோட்டம் மூன்றில் உள்ள 45 பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக  முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இன்று 26ம் , 27ம் திகதிகளில் கோட்டம் மூன்றில் கற்பிக்கும் சுமார் 360 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் பணி பகிஸ்கரிப்பு காரணமாக 30,000 மேற்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கோட்டம் மூன்றில் உயர் தர பாடசாலைகள் 6ம், சாதாரண தர பாடசாலைகள் 15ம், கீழ் பிரிவு பாடசாலைகள்  24ம் காணப்படுகின்றது.

இன்று இப் பாடசாலைகளுக்கு  ஒரு சில மாணவர்கள் மாத்திரமே வருகை தந்து மீண்டும் தமது இல்லங்களுக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இரண்டு நாட்களாக கொட்டும் மழையில் பள்ளி படிப்பை மேற்கொள்ள முடியாதுள்ளது.

ஆசியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம். எந்த பிரச்சனையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

வருடத்தில் பல மாதங்கள் விடுமுறை பெரும் ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வி நடவடிக்கை பாதிப்பு ஏற்படும் வகையில் இவ்வாறு நடந்து கொள்ள கூடாது.

ஆசிரியர்கள் தற்போது உள்ள மாணவர்களுக்கு  முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

ஆகையால், தொடர்ந்து போராட்டம் இல்லாமல் அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.

இரண்டாவது நாளாக ஹட்டன் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஸ்தம்பிதம். ஹட்டன் வலய கல்வி திணைக்கள கோட்டம் மூன்றில் உள்ள 45 பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக  முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.இன்று 26ம் , 27ம் திகதிகளில் கோட்டம் மூன்றில் கற்பிக்கும் சுமார் 360 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் பணி பகிஸ்கரிப்பு காரணமாக 30,000 மேற்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.கோட்டம் மூன்றில் உயர் தர பாடசாலைகள் 6ம், சாதாரண தர பாடசாலைகள் 15ம், கீழ் பிரிவு பாடசாலைகள்  24ம் காணப்படுகின்றது.இன்று இப் பாடசாலைகளுக்கு  ஒரு சில மாணவர்கள் மாத்திரமே வருகை தந்து மீண்டும் தமது இல்லங்களுக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,இரண்டு நாட்களாக கொட்டும் மழையில் பள்ளி படிப்பை மேற்கொள்ள முடியாதுள்ளது.ஆசியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம். எந்த பிரச்சனையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.வருடத்தில் பல மாதங்கள் விடுமுறை பெரும் ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வி நடவடிக்கை பாதிப்பு ஏற்படும் வகையில் இவ்வாறு நடந்து கொள்ள கூடாது.ஆசிரியர்கள் தற்போது உள்ள மாணவர்களுக்கு  முன்னுதாரணமாக திகழ வேண்டும்.ஆகையால், தொடர்ந்து போராட்டம் இல்லாமல் அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.

Advertisement

Advertisement

Advertisement