இலங்கையில் பட்டம் வழங்கும் நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
பல்கலைக்கழக சட்டத்தின் 25(A) பிரிவின்படி அங்கீகரிக்கப்பட்ட 26 பட்டப்படிப்பு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கையை அறிவு மையமாக மாற்றும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், இலங்கையின் பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனமொன்றின் பட்டப் படிப்புக்கு அனுமதிக்கப்படுவதற்கு தேவையான தகைமையாக, ஒவ்வொரு நாடும் பல்கலைக்கழக அனுமதிக்கு பரிசீலிக்கப்படும் குறைந்தபட்ச தகைமைகளை நிர்ணயிப்பதற்கான திட்டவட்டமான நடைமுறை எதுவும் இல்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 193 ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட குறைந்தபட்ச தகைமையை பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்புகளுக்கு வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக கருதுவதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள்: அமைச்சரவை அங்கீகாரம். இலங்கையில் பட்டம் வழங்கும் நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. பல்கலைக்கழக சட்டத்தின் 25(A) பிரிவின்படி அங்கீகரிக்கப்பட்ட 26 பட்டப்படிப்பு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கையை அறிவு மையமாக மாற்றும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என கூறப்படுகின்றது.எவ்வாறாயினும், இலங்கையின் பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனமொன்றின் பட்டப் படிப்புக்கு அனுமதிக்கப்படுவதற்கு தேவையான தகைமையாக, ஒவ்வொரு நாடும் பல்கலைக்கழக அனுமதிக்கு பரிசீலிக்கப்படும் குறைந்தபட்ச தகைமைகளை நிர்ணயிப்பதற்கான திட்டவட்டமான நடைமுறை எதுவும் இல்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 193 ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட குறைந்தபட்ச தகைமையை பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்புகளுக்கு வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக கருதுவதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.