• Apr 05 2025

முன்னாள் சிசிடி பணிப்பாளருக்கு விளக்கமறியலில் நீடிப்பு!

Chithra / Dec 20th 2024, 3:12 pm
image


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) நெவில் சில்வாவை எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நெவில் சில்வாவ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிவான் உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது அவர் புகார்தாரரிடம் பக்கச்சார்பான முறையில் நடந்து கொண்டதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றது.

விசாரணையின் போது நெவில் சில்வா, கடத்தல் மற்றும் தவறான சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்கு உதவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் சிசிடி பணிப்பாளருக்கு விளக்கமறியலில் நீடிப்பு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) நெவில் சில்வாவை எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.நெவில் சில்வாவ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.பின்னர் நீதிவான் உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.2023 ஆம் ஆண்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது அவர் புகார்தாரரிடம் பக்கச்சார்பான முறையில் நடந்து கொண்டதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றது.விசாரணையின் போது நெவில் சில்வா, கடத்தல் மற்றும் தவறான சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்கு உதவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement