க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்தல்களை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) இன்று (24) கைது செய்துள்ளது.
கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான ‘டிரான்ஸ்வொர்க் சதுக்கம்’ (Transworks Square) காணியை க்ரிஷ் நிறுவனத்துக்காக விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த காணியைப் பெற்றுக்கொள்வதற்கு உதவியமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக வழங்கியதாக ஜானகி சிறிவர்தன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த 70 மில்லியன் ரூபாய் தொகை மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக விசாரணைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஜானகி சிறிவர்தன இன்று (24) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
க்ரிஷ் நிறுவன முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன கைது க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்தல்களை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) இன்று (24) கைது செய்துள்ளது.கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான ‘டிரான்ஸ்வொர்க் சதுக்கம்’ (Transworks Square) காணியை க்ரிஷ் நிறுவனத்துக்காக விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.குறித்த காணியைப் பெற்றுக்கொள்வதற்கு உதவியமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக வழங்கியதாக ஜானகி சிறிவர்தன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த 70 மில்லியன் ரூபாய் தொகை மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக விசாரணைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட ஜானகி சிறிவர்தன இன்று (24) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.