• Nov 14 2026

வேட்டைக்காரர்கள் விரித்த வலையில் சிக்கிய சிறுத்தை – நல்லதண்ணி வனஜீவராசிகள் குழு மீட்பு நடவடிக்கை

Ziya / Nov 12th 2026, 2:42 pm
image

நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தின் ஆத்தடி பகுதியில், சட்டவிரோத வேட்டைக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய சிறுத்தையை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


வலையில் சிக்கிய சிறுத்தையை அவதானித்த அப்பகுதி மக்கள், இது குறித்து நோட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த கபில விஜயரத்னவின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.


இதையடுத்து, அவரது அறிவுறுத்தலின் பேரில் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும், ரந்தெனிகல மிருக வைத்தியசாலையிலிருந்து மிருக வைத்திய அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்திய பின்னர் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


வேட்டைக்காரர்கள் விரித்த வலையில் சிக்கிய சிறுத்தை – நல்லதண்ணி வனஜீவராசிகள் குழு மீட்பு நடவடிக்கை நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தின் ஆத்தடி பகுதியில், சட்டவிரோத வேட்டைக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய சிறுத்தையை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.வலையில் சிக்கிய சிறுத்தையை அவதானித்த அப்பகுதி மக்கள், இது குறித்து நோட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த கபில விஜயரத்னவின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.இதையடுத்து, அவரது அறிவுறுத்தலின் பேரில் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், ரந்தெனிகல மிருக வைத்தியசாலையிலிருந்து மிருக வைத்திய அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்திய பின்னர் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement