• Nov 12 2026

யாழில் சாரதிகளுக்கு திடீர் சோதனை; அதிரடியாகும் கைது - வாகனங்களும் முடக்கம்!

Chithra / Nov 12th 2026, 12:15 pm
image


யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் பயணிக்கும் சாரதிகளை இலக்குவைத்து இன்று காலை திடீர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


செம்மணிச் சந்தியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையில், அரச மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களின் சாரதிகள் பரிசோதிக்கப்பட்டனர்.


யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.


இதன்போது, போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் வாகனம் செலுத்தியதாகக் கண்டறியப்பட்ட இரு சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன், அவர்கள் செலுத்திய வாகனங்களும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.


வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் சாரதிகளுக்கு திடீர் சோதனை; அதிரடியாகும் கைது - வாகனங்களும் முடக்கம் யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் பயணிக்கும் சாரதிகளை இலக்குவைத்து இன்று காலை திடீர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.செம்மணிச் சந்தியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையில், அரச மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களின் சாரதிகள் பரிசோதிக்கப்பட்டனர்.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.இதன்போது, போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் வாகனம் செலுத்தியதாகக் கண்டறியப்பட்ட இரு சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், அவர்கள் செலுத்திய வாகனங்களும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement