• Nov 14 2026

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு!

Chithra / Nov 11th 2026, 6:48 pm
image


செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை கோரி, எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா அழைப்பு விடுத்துள்ளார்.


மன்னாரில் இன்று (11) மதியம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,


செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகளின்போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாகப் பேராசிரியர் சமர்ப்பித்த அறிக்கையில், நோயினால் உயிரிழந்தவர்களே குறித்த இடத்தில் புதைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


நோயினால் உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டிருந்தால், எவ்வாறு ஆடைகளின்றியும், கயிறுகளால் கட்டப்பட்ட நிலையிலும், உடல் பாகங்கள் உடைக்கப்பட்டும், தலையில் காயங்களுடனும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன என அவர் கேள்வி எழுப்பினார்.


மேலும், குழந்தைகள் உள்ளிட்ட பலரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் வைத்தியசாலைகளால் வழங்கப்பட்ட அறிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.


மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் குறித்த பேராசிரியர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கையிலும் சந்தேகங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.


1990 முதல் 1995ஆம் ஆண்டு வரையான யுத்த காலப்பகுதியில் செம்மணியில் சுமார் 600 பேர் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாக இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது குறித்த பகுதியில் 583 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.


இவ்வாறான நிலையில், மேலும் எத்தனை மனித எலும்புக்கூடுகள் அப்பகுதியில் இருக்கக்கூடும் என்பதை கண்டறிய வேண்டியுள்ளதாகவும், அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பாதுகாக்கும் நோக்கில் அறிக்கைகள் வெளியிடப்படுவதாகத் தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.


தொடர்ந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சுமார் 17 ஆயிரம் உறவினர்கள் கையளிக்கப்பட்டும், வீடுகள், வீதிகள் மற்றும் அகதி முகாம்களில் இருந்தும் அழைத்துச் செல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.


தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா, இல்லையா என்பதைக்கூட அரசாங்கங்கள் தெளிவுபடுத்தவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இதுவரை உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லை என்றும், சர்வதேசத்தின் தலையீட்டின் ஊடாகவே நீதி கிடைக்கும் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.


இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்டைச் சந்தியிலிருந்து செம்மணி மனிதப் புதைகுழி வரையில் நடைபவனியுடன் கூடிய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.


இந்தப் போராட்டத்திற்கு மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அணிதிரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என மனுவல் உதயச்சந்திரா மேலும் கேட்டுக்கொண்டார்.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை கோரி, எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா அழைப்பு விடுத்துள்ளார்.மன்னாரில் இன்று (11) மதியம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகளின்போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாகப் பேராசிரியர் சமர்ப்பித்த அறிக்கையில், நோயினால் உயிரிழந்தவர்களே குறித்த இடத்தில் புதைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.நோயினால் உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டிருந்தால், எவ்வாறு ஆடைகளின்றியும், கயிறுகளால் கட்டப்பட்ட நிலையிலும், உடல் பாகங்கள் உடைக்கப்பட்டும், தலையில் காயங்களுடனும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன என அவர் கேள்வி எழுப்பினார்.மேலும், குழந்தைகள் உள்ளிட்ட பலரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் வைத்தியசாலைகளால் வழங்கப்பட்ட அறிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் குறித்த பேராசிரியர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கையிலும் சந்தேகங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.1990 முதல் 1995ஆம் ஆண்டு வரையான யுத்த காலப்பகுதியில் செம்மணியில் சுமார் 600 பேர் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாக இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது குறித்த பகுதியில் 583 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.இவ்வாறான நிலையில், மேலும் எத்தனை மனித எலும்புக்கூடுகள் அப்பகுதியில் இருக்கக்கூடும் என்பதை கண்டறிய வேண்டியுள்ளதாகவும், அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பாதுகாக்கும் நோக்கில் அறிக்கைகள் வெளியிடப்படுவதாகத் தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.தொடர்ந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சுமார் 17 ஆயிரம் உறவினர்கள் கையளிக்கப்பட்டும், வீடுகள், வீதிகள் மற்றும் அகதி முகாம்களில் இருந்தும் அழைத்துச் செல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா, இல்லையா என்பதைக்கூட அரசாங்கங்கள் தெளிவுபடுத்தவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இதுவரை உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லை என்றும், சர்வதேசத்தின் தலையீட்டின் ஊடாகவே நீதி கிடைக்கும் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்டைச் சந்தியிலிருந்து செம்மணி மனிதப் புதைகுழி வரையில் நடைபவனியுடன் கூடிய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.இந்தப் போராட்டத்திற்கு மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அணிதிரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என மனுவல் உதயச்சந்திரா மேலும் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement