கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு கோரி, சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று (11) புதன்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சிறுவன் உயிரிழந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இதுவரை பெற்றோருக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, பெற்றோர் மற்றும் ஆர்வலர்களால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஹம்தி என்ற சிறுவன், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
சிறுவனின் ஒரு சிறுநீரகம் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மட்டுமே சத்திரசிகிச்சையின் போது அகற்றவுள்ளதாகவும் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், சத்திரசிகிச்சையின் போது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சிறுவன் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் முறைப்பாடு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், விசாரணை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை எனப் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிறுவன் ஹம்தியின் மரணம் தொடர்பான வழக்கில் வெளிநாட்டில் வசிக்கும் இரண்டு மருத்துவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சிறுவனின் மரணத்திற்கான உண்மையான காரணம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை அறிக்கை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹம்தியின் மரண அறிக்கை எங்கே மூன்று ஆண்டுகளாகியும் காத்திருக்கும் பெற்றோர் கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு கோரி, சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று (11) புதன்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.சிறுவன் உயிரிழந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இதுவரை பெற்றோருக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, பெற்றோர் மற்றும் ஆர்வலர்களால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஹம்தி என்ற சிறுவன், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.சிறுவனின் ஒரு சிறுநீரகம் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மட்டுமே சத்திரசிகிச்சையின் போது அகற்றவுள்ளதாகவும் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.எனினும், சத்திரசிகிச்சையின் போது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சிறுவன் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்தச் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் முறைப்பாடு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், விசாரணை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை எனப் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, சிறுவன் ஹம்தியின் மரணம் தொடர்பான வழக்கில் வெளிநாட்டில் வசிக்கும் இரண்டு மருத்துவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.சிறுவனின் மரணத்திற்கான உண்மையான காரணம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை அறிக்கை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.