• Nov 14 2026

கைது பிடியாணை ஒருபுறம்; சாகும்வரை உண்ணாவிரதம் மறுபுறம் - கஸ்ஸப தேரரைச் சுற்றி அடுத்தடுத்து திருப்பங்கள்!

Chithra / Nov 11th 2026, 5:01 pm
image


திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை அமைத்தமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


குறித்த வழக்கு இன்று (11) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட வழக்கில் பெயரிடப்பட்ட மேலும் சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து, கஸ்ஸப தேரருக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், வழக்கின் மேலதிக விசாரணையை 2027 ஜனவரி 06ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.


இதேவேளை, அநுராதபுரத்தில் சத்தியாகிரகப் போராட்டம் இடம்பெற்று வந்த இடத்தில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த தேரர்கள் இன்று (11) காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த தேரர்கள் குழுவொன்று கடந்த 7ஆம் திகதி ருவன்வெலிசாயவிற்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.


குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த பின்னணியிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.


இதற்கிடையில், இன்று கொழும்பு மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு கஸ்ஸப தேரருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இருப்பினும், இவ்வாறான பின்னணியிலேயே கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்கள் இவ்வாறு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


கைது பிடியாணை ஒருபுறம்; சாகும்வரை உண்ணாவிரதம் மறுபுறம் - கஸ்ஸப தேரரைச் சுற்றி அடுத்தடுத்து திருப்பங்கள் திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை அமைத்தமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு இன்று (11) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்போது, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட வழக்கில் பெயரிடப்பட்ட மேலும் சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, கஸ்ஸப தேரருக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், வழக்கின் மேலதிக விசாரணையை 2027 ஜனவரி 06ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.இதேவேளை, அநுராதபுரத்தில் சத்தியாகிரகப் போராட்டம் இடம்பெற்று வந்த இடத்தில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த தேரர்கள் இன்று (11) காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த தேரர்கள் குழுவொன்று கடந்த 7ஆம் திகதி ருவன்வெலிசாயவிற்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த பின்னணியிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.இதற்கிடையில், இன்று கொழும்பு மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு கஸ்ஸப தேரருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், இவ்வாறான பின்னணியிலேயே கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்கள் இவ்வாறு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement