• Apr 01 2025

முன்னாள் இந்திய துணைத் தூதுவர் யாழிற்கு திடீர் விஜயம்..!

Sharmi / Mar 29th 2025, 9:55 pm
image

முன்னாள் யாழ் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றிய  ஸ்ரீமான் ஆ.நடராஜன் இன்று மூளாயில் அமைந்துள்ள முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் இல்லத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

மூளாயில் அமிர்தலிங்கத்தின் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் அவரின் விஜயத்தின் நினைவாக மரம் ஒன்றும்  நடராஜனால் நாட்டப்பட்டது. 

தொடர்ந்து அமிர்தலிங்கம் - மங்கையர்க்கரசி நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் அரசியல் பயண வரலாற்றினைக் குறிக்கும் புகைப்பட காட்சிக்கூடத்தினையும் பார்வையிட்டார்.

இதன்போது முன்னாள் துணைத்தூதுவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். 

இந்நிகழ்வினை  அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்தனர்.


முன்னாள் இந்திய துணைத் தூதுவர் யாழிற்கு திடீர் விஜயம். முன்னாள் யாழ் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றிய  ஸ்ரீமான் ஆ.நடராஜன் இன்று மூளாயில் அமைந்துள்ள முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் இல்லத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.மூளாயில் அமிர்தலிங்கத்தின் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரின் விஜயத்தின் நினைவாக மரம் ஒன்றும்  நடராஜனால் நாட்டப்பட்டது. தொடர்ந்து அமிர்தலிங்கம் - மங்கையர்க்கரசி நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் அரசியல் பயண வரலாற்றினைக் குறிக்கும் புகைப்பட காட்சிக்கூடத்தினையும் பார்வையிட்டார்.இதன்போது முன்னாள் துணைத்தூதுவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வினை  அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்தனர்.

Advertisement

Advertisement

Advertisement