யாழ், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மீது திருட்டுக் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாவகச்சேரி மந்துவில் பகுதியில் கும்பலொன்று வீதியில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்களைத் திருடிக்கொண்டிருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள்,
இது குறித்து சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு. குகானந்தனுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு வந்த முன்னாள் உறுப்பினர் குகானந்தன் குறித்த கும்பலைத் தடுக்க முற்பட்ட வேளை, அக்கும்பல் அவரை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த குகானந்தனை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை வைத்திய சாலையில் மனுமதித்துள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய கும்பல். யாழ், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மீது திருட்டுக் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சாவகச்சேரி மந்துவில் பகுதியில் கும்பலொன்று வீதியில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்களைத் திருடிக்கொண்டிருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள்,இது குறித்து சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு. குகானந்தனுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.இதனையடுத்து அங்கு வந்த முன்னாள் உறுப்பினர் குகானந்தன் குறித்த கும்பலைத் தடுக்க முற்பட்ட வேளை, அக்கும்பல் அவரை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த குகானந்தனை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை வைத்திய சாலையில் மனுமதித்துள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.