• Oct 04 2024

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - முன்னாள் அமைச்சர் பந்துல தீர்மானம்

Chithra / Oct 4th 2024, 2:08 pm
image

Advertisement

 

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று  தெரிவித்தார்.

இருபது வருடங்களுக்கும் மேலாக ஹோமாகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், அமைச்சரவை அமைச்சர் என பல பதவிகளை வகித்து தன்னால் இயன்றவரை மக்களுக்கு சேவையாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதி இல்லாமல் பல வருடங்களாக அநாதரவாக இருந்த ஹோமாகம தொகுதி மக்களுக்காக, இந்த நகரத்தை அறிவு கேந்திர நகரமாக மாற்றுவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதை எண்ணி தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அடுத்த சில வருடங்களில் மீண்டும் கலாநிதி பட்டம் ஒன்றுக்காக கற்கை நெறியை மேற்கொள்ளவுள்ளதாகவும், சினிமா திரைப்படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - முன்னாள் அமைச்சர் பந்துல தீர்மானம்  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று  தெரிவித்தார்.இருபது வருடங்களுக்கும் மேலாக ஹோமாகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், அமைச்சரவை அமைச்சர் என பல பதவிகளை வகித்து தன்னால் இயன்றவரை மக்களுக்கு சேவையாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதி இல்லாமல் பல வருடங்களாக அநாதரவாக இருந்த ஹோமாகம தொகுதி மக்களுக்காக, இந்த நகரத்தை அறிவு கேந்திர நகரமாக மாற்றுவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதை எண்ணி தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.அடுத்த சில வருடங்களில் மீண்டும் கலாநிதி பட்டம் ஒன்றுக்காக கற்கை நெறியை மேற்கொள்ளவுள்ளதாகவும், சினிமா திரைப்படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement