• Jul 12 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு பிணை..!

Sharmi / Jun 6th 2025, 10:57 am
image

பண மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். 

பண மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையால் மார்ச் மாதம் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது வருமானத்திற்கு அப்பால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை பராமரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இன்று (6) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது. 


முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு பிணை. பண மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். பண மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையால் மார்ச் மாதம் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டார்.முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது வருமானத்திற்கு அப்பால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை பராமரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இன்று (6) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now