• Oct 03 2026

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் பந்துல - முக்கிய அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் விசாரணை

Chithra / Oct 2nd 2026, 10:44 am
image


முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) இன்று (02) காலை ஆஜராகியுள்ளார்.


இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமைய அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.


கடந்த 2007ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


இதன்படி, குறித்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பான விடயங்கள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று காலை இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.


இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் பந்துல - முக்கிய அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் விசாரணை முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) இன்று (02) காலை ஆஜராகியுள்ளார்.இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமைய அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.கடந்த 2007ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதன்படி, குறித்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பான விடயங்கள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று காலை இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement