• Jan 23 2025

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது !

Tharmini / Jan 19th 2025, 3:04 pm
image

சட்டவிரோதமான முறையில் ட்ரக் வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சட்ட விதிகளுக்கு முரணாக பொருத்தப்பட்ட வாகனத்தை அவர் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (19) வலான ஊழல் தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியபோதே முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

அதேநேரம், விஜித் விஜயமுனி சொய்சாவை சம்பந்தப்பட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது சட்டவிரோதமான முறையில் ட்ரக் வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சட்ட விதிகளுக்கு முரணாக பொருத்தப்பட்ட வாகனத்தை அவர் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (19) வலான ஊழல் தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியபோதே முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.அதேநேரம், விஜித் விஜயமுனி சொய்சாவை சம்பந்தப்பட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement