• Jul 18 2026

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு!

Chithra / Jul 17th 2026, 9:19 am
image


இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன இன்று (17) உயிரிழந்துள்ளார்.


துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


ஆரம்பகட்ட தகவல்களின்படி, அத்துருகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் தமக்குத் தாமே துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


எனினும், சம்பவத்தின் துல்லியமான காரணம் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.


1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன், 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார். 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார். 


அதன்பின்னர் ஒரு வருடமும் 7 மாதங்களும் குறித்த பதவியை வகித்து வந்ததுடன் பின்னர் 35 வது பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். 


இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் அவர் தமது கடமைகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன இன்று (17) உயிரிழந்துள்ளார்.துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆரம்பகட்ட தகவல்களின்படி, அத்துருகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் தமக்குத் தாமே துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், சம்பவத்தின் துல்லியமான காரணம் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன், 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் ஒரு வருடமும் 7 மாதங்களும் குறித்த பதவியை வகித்து வந்ததுடன் பின்னர் 35 வது பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் அவர் தமது கடமைகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement