முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் பதவியை வழங்குவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் பதவியை வகிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மேலதிகமாக, சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு உயர் பதவி வழங்க நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பில் குமாரதுங்கவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடைபெறவுள்ள தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை பலப்படுத்தி பரந்த கூட்டணியை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான எம்.பி.க்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, புதிய பதவியை வழங்கும் தீர்மானம் எதிர்வரும் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் முன்வைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு உயர் பதவி கட்சிக்குள் தீவிர ஆலோசணை samugammedia முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் பதவியை வழங்குவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.கட்சியின் தலைவர் பதவியை வகிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மேலதிகமாக, சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு உயர் பதவி வழங்க நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பில் குமாரதுங்கவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், நடைபெறவுள்ள தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை பலப்படுத்தி பரந்த கூட்டணியை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான எம்.பி.க்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, புதிய பதவியை வழங்கும் தீர்மானம் எதிர்வரும் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் முன்வைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.