• Nov 01 2024

விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி: சபையில் ரோஹித குற்றச்சாட்டு samugammedia

Chithra / Nov 22nd 2023, 8:06 am
image

Advertisement

 

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நான் எதிர்க்கட்சி தலைவரிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன். எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையை யார் கொன்றது?

மே மாதம் முதலாம் திகதி வேலுப்பிள்ளை பிரபாகரனே கொன்றார். விடுதலைப்புலிகள் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியை நடுவீதியில் வைத்து படுகொலை செய்தனர். எனவே வேலுப்பிள்ளை பிரபாகரன் கட்டுப்படுத்துவது இலகுவானதாக இருக்கவில்லை. 

எமது சில தலைவர்கள் அச்சமடைந்தனர். எமது தலைவர்கள் புலிகளுடன் இரவில் கொடுக்கல் வாங்கல் செய்தனர். என்னிடம் இது குறித்த ஹன்சார்ட் உள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த விடயத்தை நாடாளுமன்றில் கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கியதாக கூறினார். சீமேந்து வழங்கியதாக கூறினார். எதிர்க்கட்சித் தலைவரின் தந்தை மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. உயிருடன் இல்லாத ஒருவரை அவமானப்படுத்தவில்லை.

கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரே இந்த குற்றச்சாட்டை சுமத்துகின்றார். நாங்கள் இதை சொல்லவில்லை. தனது தந்தை புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி பணம் வழங்கி சீமேந்து வழங்கி இருந்தால் அதனால் எத்தனை உயிர்கள் அழிக்கப்பட்டு இருக்கும்? எமது இராணுவ படையினரின் எத்தனை பேரது உயிர்கள் காவு கொள்ளப்பட்டு இருக்கும்?

அவ்வாறு உயிரிழந்தவர்களின் அவ்வாறு உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினர் யாரை பொருளாதாரக் கொலையாளியென கூற வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி: சபையில் ரோஹித குற்றச்சாட்டு samugammedia  முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,நான் எதிர்க்கட்சி தலைவரிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன். எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையை யார் கொன்றதுமே மாதம் முதலாம் திகதி வேலுப்பிள்ளை பிரபாகரனே கொன்றார். விடுதலைப்புலிகள் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியை நடுவீதியில் வைத்து படுகொலை செய்தனர். எனவே வேலுப்பிள்ளை பிரபாகரன் கட்டுப்படுத்துவது இலகுவானதாக இருக்கவில்லை. எமது சில தலைவர்கள் அச்சமடைந்தனர். எமது தலைவர்கள் புலிகளுடன் இரவில் கொடுக்கல் வாங்கல் செய்தனர். என்னிடம் இது குறித்த ஹன்சார்ட் உள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த விடயத்தை நாடாளுமன்றில் கூறினார்.விடுதலைப் புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கியதாக கூறினார். சீமேந்து வழங்கியதாக கூறினார். எதிர்க்கட்சித் தலைவரின் தந்தை மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. உயிருடன் இல்லாத ஒருவரை அவமானப்படுத்தவில்லை.கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரே இந்த குற்றச்சாட்டை சுமத்துகின்றார். நாங்கள் இதை சொல்லவில்லை. தனது தந்தை புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி பணம் வழங்கி சீமேந்து வழங்கி இருந்தால் அதனால் எத்தனை உயிர்கள் அழிக்கப்பட்டு இருக்கும் எமது இராணுவ படையினரின் எத்தனை பேரது உயிர்கள் காவு கொள்ளப்பட்டு இருக்கும்அவ்வாறு உயிரிழந்தவர்களின் அவ்வாறு உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினர் யாரை பொருளாதாரக் கொலையாளியென கூற வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement