• Dec 09 2024

11 வயது கிளிநொச்சி சிறுவனின் சாதனை பயணம்- இன்று மருதங்கேணியை வந்தடைந்தது!

Tamil nila / Nov 1st 2024, 9:29 pm
image

11 வயதுடைய கிளிநொச்சி மாணவனின் சாதனை பயணம் இன்று  மருதங்கேணியை வந்தடைந்துள்ளது. 


சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில்,  கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய முரளிதரன் டியோஜன் எனும் சிறுவன்  நாடளாவிய ரீதியாக நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில்  நேற்றைய தினம் மன்னார் சங்குப்பிட்டி ஊடாக யாழ்ப்பாணம் வருகைதந்து  அங்கிருந்து பருத்தித்துறை நகரை சென்றடைந்த நிலையில் இன்று பிற்பகல் மருதங்கேணி பகுதியை வந்தடைந்துள்ளனர்.

குறித்த சிறுவனுடன் அவரது தந்தையும் இணைந்து பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்த பயணத்தை இவர் ஆரம்பித்திருந்தார்.  

மேலும்  நாளை மறுதினம் கிளிநொச்சி நகரில் 11 மணியளவில் பயணம் நிறைவடையவுள்ளமை குறிப்பிட தக்கது.

11 வயது கிளிநொச்சி சிறுவனின் சாதனை பயணம்- இன்று மருதங்கேணியை வந்தடைந்தது 11 வயதுடைய கிளிநொச்சி மாணவனின் சாதனை பயணம் இன்று  மருதங்கேணியை வந்தடைந்துள்ளது. சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில்,  கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய முரளிதரன் டியோஜன் எனும் சிறுவன்  நாடளாவிய ரீதியாக நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில்  நேற்றைய தினம் மன்னார் சங்குப்பிட்டி ஊடாக யாழ்ப்பாணம் வருகைதந்து  அங்கிருந்து பருத்தித்துறை நகரை சென்றடைந்த நிலையில் இன்று பிற்பகல் மருதங்கேணி பகுதியை வந்தடைந்துள்ளனர்.குறித்த சிறுவனுடன் அவரது தந்தையும் இணைந்து பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்த பயணத்தை இவர் ஆரம்பித்திருந்தார்.  மேலும்  நாளை மறுதினம் கிளிநொச்சி நகரில் 11 மணியளவில் பயணம் நிறைவடையவுள்ளமை குறிப்பிட தக்கது.

Advertisement

Advertisement

Advertisement