• Nov 07 2025

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு வாகனங்களை கோரினால் மீள ஒப்படைக்கலாம்! – அரசாங்கம் அறிவிப்பு

Chithra / Oct 7th 2025, 12:50 pm
image


முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும் என பொதுமக்கள பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் தாம் அனுபவித்த வரப்பிரசாதங்களை மீள அரசாங்கத்திடம் கையளித்து வருகின்றனர்.

எனினும், அந்த ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.

இந்தநிலையில், சிலர் தாங்கள் பயன்படுத்திய சில பாதுகாப்பு வாகனங்களை கூட மீள ஒப்படைத்துள்ளனர்.

இந்த சட்டத்தின் கீழ் சில வரப்பிரசாதங்கள் மீள கையளிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனவே, பாதுகாப்பு வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு வரப்பிரசாதங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளால் கோரிக்கை முன்வைக்கப்படுமாயின், அது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்ய தயாராகவுள்ளது.

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் கீழ் வராத பாதுகாப்பு சார் விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.


முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு வாகனங்களை கோரினால் மீள ஒப்படைக்கலாம் – அரசாங்கம் அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும் என பொதுமக்கள பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.அதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் தாம் அனுபவித்த வரப்பிரசாதங்களை மீள அரசாங்கத்திடம் கையளித்து வருகின்றனர்.எனினும், அந்த ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.இந்தநிலையில், சிலர் தாங்கள் பயன்படுத்திய சில பாதுகாப்பு வாகனங்களை கூட மீள ஒப்படைத்துள்ளனர்.இந்த சட்டத்தின் கீழ் சில வரப்பிரசாதங்கள் மீள கையளிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.எனவே, பாதுகாப்பு வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு வரப்பிரசாதங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளால் கோரிக்கை முன்வைக்கப்படுமாயின், அது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்ய தயாராகவுள்ளது.ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் கீழ் வராத பாதுகாப்பு சார் விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement