• Nov 24 2024

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கிடைத்த புதிய பதவி...!

Sharmi / Jul 9th 2024, 8:44 am
image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே கருஜயசூரிய ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

கருஜயசூரியவின் பெயரை முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால  முன்மொழிந்ததுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜி. ஜயசேன அதனை வழிமொழிந்தார்.

அத்துடன், ஒன்றியத்தின் அழைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பிரேமரத்ன அனைத்து உறுப்பினர்களினதும் ஏகோபித்த முடிவில் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் சிக்கல்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த சிக்கல்களை நிவர்த்தி செய்துகொள்வதற்கு செயலாளர் நாயகத்தின் அலுவலகம் நடவடிக்கை எடுப்பதாக செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிவு மற்றும் அனுபவம் நாட்டின் எதிர்கால மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்துகொள்வதன் முக்கியத்துவம் தொடர்பில் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, ஒன்றியத்துக்கான யாப்பை அமைத்தல் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச தொடர்புகள் மற்றும் அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் உப குழுக்களை நியமிப்பதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய, நலன்புரி அலுவலர்கள் பற்றிய உப குழு, யாப்பு பற்றிய உப குழு, அரசியல் அலுவல்கள் பற்றிய உப குழு, பொருளாதாரம் மற்றும் சர்வதேச அலுவல்கள் பற்றிய உப குழு என உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில்6 முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் பிரதி சபாநாயகர்களான திலங்க சுமதிபால மற்றும் ஆனந்த குமாரசிறி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பிரேமரத்ன, அனுர பஸ்டியன், சந்திரதாச கலப்பத்தி, ரஞ்சன் ராமநாயக்க, சந்தன கத்ரியாராச்சி, ஜீவன் குமாரதுங்க, சுமேதா ஜி. ஜயசேன, திஸ்ஸ கறலியத்த, எம்.எஸ்.எஸ். அமீர் அலி,நோயல் பத்மசிறி, ஆனந்த குலரத்ன, சமந்தா கருணாரத்ன, ஹேமா ரத்நாயக்க, உபாலி அமரசிரி, தேமிய ஹுருள்ளே, கேசரலால் குணசேகர, சமன்சிரி ஹேரத், தீபால் குணசேகர, பிரேமசிறி மானகே, பி. திஸ்ஸகுட்டியாராச்சி, உதித லொக்குபண்டார, கமலா ரணதுங்க, ஆர். நந்திமித்ர ஜி. த சொய்சா, ரவீந்திர சமரவீர, நந்தன குணதிலக, நந்திமித்ர ஏக்கநாயக்க, பி. தயாரத்ன உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கிடைத்த புதிய பதவி. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே கருஜயசூரிய ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டார்.கருஜயசூரியவின் பெயரை முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால  முன்மொழிந்ததுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜி. ஜயசேன அதனை வழிமொழிந்தார்.அத்துடன், ஒன்றியத்தின் அழைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பிரேமரத்ன அனைத்து உறுப்பினர்களினதும் ஏகோபித்த முடிவில் தெரிவு செய்யப்பட்டார்.இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.இதன்போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் சிக்கல்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த சிக்கல்களை நிவர்த்தி செய்துகொள்வதற்கு செயலாளர் நாயகத்தின் அலுவலகம் நடவடிக்கை எடுப்பதாக செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிவு மற்றும் அனுபவம் நாட்டின் எதிர்கால மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்துகொள்வதன் முக்கியத்துவம் தொடர்பில் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.அதற்கமைய, ஒன்றியத்துக்கான யாப்பை அமைத்தல் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச தொடர்புகள் மற்றும் அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் உப குழுக்களை நியமிப்பதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.அதற்கமைய, நலன்புரி அலுவலர்கள் பற்றிய உப குழு, யாப்பு பற்றிய உப குழு, அரசியல் அலுவல்கள் பற்றிய உப குழு, பொருளாதாரம் மற்றும் சர்வதேச அலுவல்கள் பற்றிய உப குழு என உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.இந்தக் கூட்டத்தில்6 முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் பிரதி சபாநாயகர்களான திலங்க சுமதிபால மற்றும் ஆனந்த குமாரசிறி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பிரேமரத்ன, அனுர பஸ்டியன், சந்திரதாச கலப்பத்தி, ரஞ்சன் ராமநாயக்க, சந்தன கத்ரியாராச்சி, ஜீவன் குமாரதுங்க, சுமேதா ஜி. ஜயசேன, திஸ்ஸ கறலியத்த, எம்.எஸ்.எஸ். அமீர் அலி,நோயல் பத்மசிறி, ஆனந்த குலரத்ன, சமந்தா கருணாரத்ன, ஹேமா ரத்நாயக்க, உபாலி அமரசிரி, தேமிய ஹுருள்ளே, கேசரலால் குணசேகர, சமன்சிரி ஹேரத், தீபால் குணசேகர, பிரேமசிறி மானகே, பி. திஸ்ஸகுட்டியாராச்சி, உதித லொக்குபண்டார, கமலா ரணதுங்க, ஆர். நந்திமித்ர ஜி. த சொய்சா, ரவீந்திர சமரவீர, நந்தன குணதிலக, நந்திமித்ர ஏக்கநாயக்க, பி. தயாரத்ன உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement