நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 226 பாடசாலைகள் நுளம்பு மற்றும் நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்களாவர்.
இந்நிலையில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துக்கமைய நேற்று முதல் அனைத்து பாடசாலைகளிலும் சுத்தம் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் போது சுமார் 1 இலட்சத்து 44 ஆயிரத்து 250 இடங்கள் அதிகாரிகளினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன்,
இதன்போது 35 ஆயிரத்து 495 பகுதிகள் நுளம்புகள் பல்கிப் பெருகக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
4,275 பகுதிகளில் நுளம்புக் குடம்பிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
அத்தோடு 3812 சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 982 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 25 சதவீதமான வீடுகள் டெங்கு அபாயமிக்க இடங்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது வீடுகள் ஓரளவு பாதுகாப்பான நிலைமையில் உள்ளது.என்றார்.
டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள் அடையாளம் நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவிக்கையில்,நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 226 பாடசாலைகள் நுளம்பு மற்றும் நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்களாவர்.இந்நிலையில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துக்கமைய நேற்று முதல் அனைத்து பாடசாலைகளிலும் சுத்தம் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் போது சுமார் 1 இலட்சத்து 44 ஆயிரத்து 250 இடங்கள் அதிகாரிகளினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போது 35 ஆயிரத்து 495 பகுதிகள் நுளம்புகள் பல்கிப் பெருகக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4,275 பகுதிகளில் நுளம்புக் குடம்பிகளும் கண்டறியப்பட்டுள்ளன. அத்தோடு 3812 சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 982 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.அத்தோடு 25 சதவீதமான வீடுகள் டெங்கு அபாயமிக்க இடங்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது வீடுகள் ஓரளவு பாதுகாப்பான நிலைமையில் உள்ளது.என்றார்.