• Sep 08 2024

30 வீதத்தால் குறையும் மின்கட்டணம் - அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

Chithra / Jul 9th 2024, 8:47 am
image

Advertisement

 

எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மின் கட்டணக் கட்டணம் ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 0-30 யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு விலை ரூ.8 இலிருந்து ரூ.6 வரையும், 

30-60 யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு ரூ.20 இலிருந்து ரூபா 9 வரையும், 

60-90 வரையிலான யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு ரூ.30 இலிருந்து 18 ரூபா வரை, 12 ரூபாவினாலும்,

90-180 யுனிட்களுக்கு இடையே ரூ.50 இலிருந்து 30 ரூபா வரைக்கும் 20 ரூபாவிலும் மின்கட்டனத்தினை குறைக்க தான் பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் கோரப்படவுள்ளன.

இந்நிகழ்வு இன்று (09) இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

 

30 வீதத்தால் குறையும் மின்கட்டணம் - அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு  எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இந்த புதிய மின் கட்டணக் கட்டணம் ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.இதன்படி, 0-30 யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு விலை ரூ.8 இலிருந்து ரூ.6 வரையும், 30-60 யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு ரூ.20 இலிருந்து ரூபா 9 வரையும், 60-90 வரையிலான யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு ரூ.30 இலிருந்து 18 ரூபா வரை, 12 ரூபாவினாலும்,90-180 யுனிட்களுக்கு இடையே ரூ.50 இலிருந்து 30 ரூபா வரைக்கும் 20 ரூபாவிலும் மின்கட்டனத்தினை குறைக்க தான் பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் கோரப்படவுள்ளன.இந்நிகழ்வு இன்று (09) இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement