• Apr 13 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பிணை..!

Sharmi / Apr 8th 2025, 2:54 pm
image

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மார்ச் 25 அன்று இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன், முதலில் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் அவரது விளக்கமறியல் காலம் இன்று (08) வரை நீடிக்கப்பட்டது. 

இதே வழக்கில், கடந்த ஆண்டு வியாழேந்திரனின் தனிப்பட்ட செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

தற்போது, விசாரணைகள் தொடரும் நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பிணை. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த மார்ச் 25 அன்று இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன், முதலில் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் அவரது விளக்கமறியல் காலம் இன்று (08) வரை நீடிக்கப்பட்டது. இதே வழக்கில், கடந்த ஆண்டு வியாழேந்திரனின் தனிப்பட்ட செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். தற்போது, விசாரணைகள் தொடரும் நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement