காலி- அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
கொலைசெய்யப்பட்டவர் 61 வயதுடைய பூஸா சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் சிறிதத் தம்மிக்க என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்
காலி, அக்மீமன தலகஹ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் இருந்த இனந்தெரியாத நபர்கள் அவர்மீது துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொலையாளி யார் ? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இவர் பூசா சிறைச்சாலையில் பணியாற்றி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார் -பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் காலி- அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.கொலைசெய்யப்பட்டவர் 61 வயதுடைய பூஸா சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் சிறிதத் தம்மிக்க என பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் காலி, அக்மீமன தலகஹ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் இருந்த இனந்தெரியாத நபர்கள் அவர்மீது துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொலையாளி யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இவர் பூசா சிறைச்சாலையில் பணியாற்றி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது