• Dec 14 2024

வவுனியா வைத்தியசாலையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்!

Tamil nila / Nov 30th 2024, 8:40 am
image

பதவியாவைச்சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிற்கு சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. 

மேற்படி தாயார் மகப்பேற்று வைத்தியநிபுணர் காமினி அவர்களால் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்துள்ளதுடன் அவரது மகப்பேற்று வைத்திய விடுதியாகிய 7ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர் திலீபன் அவர்களினால் சிசேரியன் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு நான்கு குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக வவுனியா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். 

மேற்படி தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளதுடன், நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

வவுனியா வைத்தியசாலையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் பதவியாவைச்சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிற்கு சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. மேற்படி தாயார் மகப்பேற்று வைத்தியநிபுணர் காமினி அவர்களால் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்துள்ளதுடன் அவரது மகப்பேற்று வைத்திய விடுதியாகிய 7ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர் திலீபன் அவர்களினால் சிசேரியன் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு நான்கு குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வவுனியா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். மேற்படி தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளதுடன், நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement