• Dec 14 2024

ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மருதங்கேணிப் பாலம்; நேரில் சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர்..!

Sharmi / Nov 30th 2024, 8:53 am
image

யாழ். மருதங்கேணிப் பாலத்தின் அருகில் வீதி தாழ் இறங்கியமையால் பாலம் ஆபத்தான நிலையில் காணப்பட்டமையை அடுத்து உடனடியாக அதன் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புதுக்காட்டுச் சந்தியில் இருந்து தாளையடி செல்லும் வீதியில் மருதங்கேணி பாலம் அமைந்துள்ள வீதியின் பகுதி, அதிக நீரோட்டம் காரணமாக நேற்றுக் காலை தாழிறங்கிக் காணப்பட்டது.

உடனடியாக அந்தப் பகுதியில் மண் மூடைகள் போடப்பட்டு சீர்செய்யப்பட்டமையால் மேலும் வீதி சேதமடையாமல் தடுக்கப்பட்டது.

அதேவேளை, இந்தப் பாலம் ஊடாக கனரக வாகனங்களின் போக்குவரத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ் . மாவட்ட செயலர் ம.பிரதீபன் நேற்று அறிவித்துள்ளார்.

நேற்றுக் காலை வீதி தாழிறங்கிக் காணப்பட்டமை தொடர்பில் தகவல் அறிந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மருதங்கேணிப்  பகுதிக்குச் சென்று திருத்த வேலைகளை நேரில் பார்வையிட்டதுடன், அதிகாரிகளிடம் அது தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.


ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மருதங்கேணிப் பாலம்; நேரில் சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர். யாழ். மருதங்கேணிப் பாலத்தின் அருகில் வீதி தாழ் இறங்கியமையால் பாலம் ஆபத்தான நிலையில் காணப்பட்டமையை அடுத்து உடனடியாக அதன் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.புதுக்காட்டுச் சந்தியில் இருந்து தாளையடி செல்லும் வீதியில் மருதங்கேணி பாலம் அமைந்துள்ள வீதியின் பகுதி, அதிக நீரோட்டம் காரணமாக நேற்றுக் காலை தாழிறங்கிக் காணப்பட்டது.உடனடியாக அந்தப் பகுதியில் மண் மூடைகள் போடப்பட்டு சீர்செய்யப்பட்டமையால் மேலும் வீதி சேதமடையாமல் தடுக்கப்பட்டது. அதேவேளை, இந்தப் பாலம் ஊடாக கனரக வாகனங்களின் போக்குவரத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ் . மாவட்ட செயலர் ம.பிரதீபன் நேற்று அறிவித்துள்ளார்.நேற்றுக் காலை வீதி தாழிறங்கிக் காணப்பட்டமை தொடர்பில் தகவல் அறிந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மருதங்கேணிப்  பகுதிக்குச் சென்று திருத்த வேலைகளை நேரில் பார்வையிட்டதுடன், அதிகாரிகளிடம் அது தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement