சட்டவிரோத மதுபானம் அருந்தி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பணிபுரியும் சிறு பணியாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நால்வரில் இருவர் கடந்த 24ஆம் திகதியும், ஏனைய இருவரும் நேற்று (28) உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த 28ஆம் திகதி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருக்கு இருதய நோய் இருந்ததாகவும், எனினும் சட்டவிரோத மதுபானத்திற்கு அடிமையாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் 46 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட புதிய பதெனிய, விஹாரை சந்தி மற்றும் தம்புள்ளை யாபகம ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்த மரணங்கள் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தின் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மதுபானம் அருந்தி 4 பேர் உயிரிழப்பு சட்டவிரோத மதுபானம் அருந்தி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பணிபுரியும் சிறு பணியாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த நால்வரில் இருவர் கடந்த 24ஆம் திகதியும், ஏனைய இருவரும் நேற்று (28) உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும், கடந்த 28ஆம் திகதி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருக்கு இருதய நோய் இருந்ததாகவும், எனினும் சட்டவிரோத மதுபானத்திற்கு அடிமையாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் 46 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட புதிய பதெனிய, விஹாரை சந்தி மற்றும் தம்புள்ளை யாபகம ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.எவ்வாறாயினும், இந்த மரணங்கள் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.சடலத்தின் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.