நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போற்றி தோட்டத்திலுள்ள கள அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரத்தினக்கல் தோண்டிக்கொண்டிருந்த கள அதிகாரி உட்பட நான்கு சந்தேக நபர்களை மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தோட்டத்திலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் செல்லும் கால்வாய்க்கு அருகில் கள அலுவலரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ளதுடன், அந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் படுக்கையறையில் 30 அடி ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு குழியில் இருந்த வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ இல்லத்தினுள் நீண்ட நாட்களாக மண் அள்ளப்பட்டு இருப்பதாக சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் பலாங்கொடை,பொகவந்தலாவ மற்றும் நோர்வூட் பிரதேசங்களை சேர்ந்தவர்கள்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது.samugammedia நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போற்றி தோட்டத்திலுள்ள கள அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரத்தினக்கல் தோண்டிக்கொண்டிருந்த கள அதிகாரி உட்பட நான்கு சந்தேக நபர்களை மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தோட்டத்திலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் செல்லும் கால்வாய்க்கு அருகில் கள அலுவலரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ளதுடன், அந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் படுக்கையறையில் 30 அடி ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு குழியில் இருந்த வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ இல்லத்தினுள் நீண்ட நாட்களாக மண் அள்ளப்பட்டு இருப்பதாக சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் பலாங்கொடை,பொகவந்தலாவ மற்றும் நோர்வூட் பிரதேசங்களை சேர்ந்தவர்கள்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.