ஒவ்வொரு விடயத்திலும் எங்களது பிரச்சினைக்கான தீர்வை காண வேண்டுமே தவிர வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்கின்ற தீர்வை செய்ய கூடாது. என நாடாளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் எவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
இந்நாட்டில் நீண்ட காலமாக இனப்பிரச்சினை இருக்கிறது. உலகத்தில் பல நாடுகளில் பல மொழியினை பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெரிய பிரச்சினைகளை நாங்கள் காணவில்லை. இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. பல இனங்கள் இருக்கின்றன. பல சமூகங்கள் இருக்கின்றன. ஆனால் பிரச்சினைகள் இல்லை. இலங்கையில் 2 மொழிகளே இருக்கின்றன. 2 இனங்களே இருக்கின்றன. இனப்பிரச்சினை மட்டும் இந்நாட்டில் தீரவில்லை. பல அழிவுகளை இந்நாடு எதிர்கொண்டு இருக்கிறது.
வெளிநாட்டவரின் தலையீடு காரணமாக இனப்பிரச்சினை அதிகரித்துக்கொண்டு போகிறது. ஆனால் பிரச்சினையை இலகுவாக தீர்க்க முடியும் என்பது எமக்கு எல்லோருக்கும் தெரியும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின் இலங்கையை 9 மாகாணமாக பிரித்து ஒரு பகிடியாக அதை பார்த்து கொண்டு இருக்கிறோம். இந்த தீர்வுகளால் மக்கள் எந்த விதமான பயனும் அடையவில்லை.
இந்த நாட்டில் வாழும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மத சுதந்திரம் உண்டு. வாழுவதற்கான உரிமையும் உண்டு. இடப்பிரச்சினையை தீர்த்தால் இனப்பிரச்சினையை 90 வீதம் தீர்க்க முடியும். ஒவ்வொரு விடயத்திலும் எங்களது பிரச்சினைக்கான தீர்வை காண வேண்டுமே தவிர வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்கின்ற தீர்வை செய்ய கூடாது. என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் அங்கு இனப்பிரச்சினை இல்லை - ஆனால் இலங்கையில் சபையில் அதிரடியாக வினவிய அதாவுல்லா எம்.பி.samugammedia ஒவ்வொரு விடயத்திலும் எங்களது பிரச்சினைக்கான தீர்வை காண வேண்டுமே தவிர வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்கின்ற தீர்வை செய்ய கூடாது. என நாடாளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் எவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.இந்நாட்டில் நீண்ட காலமாக இனப்பிரச்சினை இருக்கிறது. உலகத்தில் பல நாடுகளில் பல மொழியினை பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெரிய பிரச்சினைகளை நாங்கள் காணவில்லை. இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. பல இனங்கள் இருக்கின்றன. பல சமூகங்கள் இருக்கின்றன. ஆனால் பிரச்சினைகள் இல்லை. இலங்கையில் 2 மொழிகளே இருக்கின்றன. 2 இனங்களே இருக்கின்றன. இனப்பிரச்சினை மட்டும் இந்நாட்டில் தீரவில்லை. பல அழிவுகளை இந்நாடு எதிர்கொண்டு இருக்கிறது. வெளிநாட்டவரின் தலையீடு காரணமாக இனப்பிரச்சினை அதிகரித்துக்கொண்டு போகிறது. ஆனால் பிரச்சினையை இலகுவாக தீர்க்க முடியும் என்பது எமக்கு எல்லோருக்கும் தெரியும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின் இலங்கையை 9 மாகாணமாக பிரித்து ஒரு பகிடியாக அதை பார்த்து கொண்டு இருக்கிறோம். இந்த தீர்வுகளால் மக்கள் எந்த விதமான பயனும் அடையவில்லை.இந்த நாட்டில் வாழும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மத சுதந்திரம் உண்டு. வாழுவதற்கான உரிமையும் உண்டு. இடப்பிரச்சினையை தீர்த்தால் இனப்பிரச்சினையை 90 வீதம் தீர்க்க முடியும். ஒவ்வொரு விடயத்திலும் எங்களது பிரச்சினைக்கான தீர்வை காண வேண்டுமே தவிர வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்கின்ற தீர்வை செய்ய கூடாது. என அவர் மேலும் தெரிவித்தார்.