• Dec 01 2024

இலங்கை வரவுள்ள நான்கு கப்பல்! அநுர அரசு வழங்கியுள்ள அனுமதி

Chithra / Nov 28th 2024, 8:03 am
image

 

இலங்கைக்கான டீசல் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, சிங்கப்பூரின் பிபி எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரையிலான 6 மாத காலத்திற்கு, இலங்கைக்கான டீசலை வழங்க அந்த நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட விலை மனுக்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 6 மாத காலத்திற்கு 4 கப்பல் டீசல் தொகையை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்திற்காகச் சிங்கப்பூரின் பிபி எனர்ஜி நிறுவனம் விலை மனுவைச் சமர்ப்பித்துள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இலங்கை வரவுள்ள நான்கு கப்பல் அநுர அரசு வழங்கியுள்ள அனுமதி  இலங்கைக்கான டீசல் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, சிங்கப்பூரின் பிபி எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரையிலான 6 மாத காலத்திற்கு, இலங்கைக்கான டீசலை வழங்க அந்த நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட விலை மனுக்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை 6 மாத காலத்திற்கு 4 கப்பல் டீசல் தொகையை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்திற்காகச் சிங்கப்பூரின் பிபி எனர்ஜி நிறுவனம் விலை மனுவைச் சமர்ப்பித்துள்ளது.அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement