• Sep 10 2024

இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்? - தமிழக மீனவர்கள் நால்வர் படுகாயம்!

Chithra / Aug 11th 2024, 1:36 pm
image

Advertisement


வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் மீனவர்கள் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களைத் தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இச் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இரும்புக்கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கப்பட்டதில் காயமடைந்த மீனவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், மீனவர்களின் ரூ.4 இலட்சம் மதிப்புள்ள வலைகள், ஜி.பி.எஸ். கருவி போன்றவற்றை பறித்துச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் நால்வர் படுகாயம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் மீனவர்கள் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களைத் தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இரும்புக்கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கப்பட்டதில் காயமடைந்த மீனவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், மீனவர்களின் ரூ.4 இலட்சம் மதிப்புள்ள வலைகள், ஜி.பி.எஸ். கருவி போன்றவற்றை பறித்துச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement