• Nov 28 2024

யாழின் முக்கிய பகுதியில் நான்கு இளைஞர்கள் அதிரடியாக கைது...! வெளியான காரணம்...!

Sharmi / Feb 20th 2024, 11:28 am
image

யாழில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5கிராம் 465மில்லிகிராம் ஹெரோயினுடன் கோண்டாவில் வீதி இருபாலையில் வைத்து நால்வரையும் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

ஹெரோயினை கொள்வனவு செய்து கொண்டு செல்வதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய கோண்டாவில் இருபாலை வீதிக்கு விரைந்த பொலிஸார்,  2கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் 31 வயதான ஒருவரையும் 24 வயதான இளைஞர் ஒருவரை 85 மில்லிகிராம் ஹெரோயினுடனும், 25 வயதான இளைஞர் ஒருவரை 2கிராம் 20 மில்லி கிராம் ஹெரோயினுடன் , 24 வயதான இளைஞர் ஒருவரை 1கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயினுடனும் கைது செய்தனர்.

இதேவேளை, இவர்களிடம் இருந்து ஊசிகளையும் கைப்பற்றிய நிலையில் குறித்த நால்வருக்கு எதிராக  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.

முதற்கட்ட விசாரணைகளில் குருநகர் பகுதியில் இருந்து ஹெரோயின் கொள்வனவு செய்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பிலிருந்து தெரியவருகிறது.

யாழின் முக்கிய பகுதியில் நான்கு இளைஞர்கள் அதிரடியாக கைது. வெளியான காரணம். யாழில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.5கிராம் 465மில்லிகிராம் ஹெரோயினுடன் கோண்டாவில் வீதி இருபாலையில் வைத்து நால்வரையும் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,ஹெரோயினை கொள்வனவு செய்து கொண்டு செல்வதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய கோண்டாவில் இருபாலை வீதிக்கு விரைந்த பொலிஸார்,  2கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் 31 வயதான ஒருவரையும் 24 வயதான இளைஞர் ஒருவரை 85 மில்லிகிராம் ஹெரோயினுடனும், 25 வயதான இளைஞர் ஒருவரை 2கிராம் 20 மில்லி கிராம் ஹெரோயினுடன் , 24 வயதான இளைஞர் ஒருவரை 1கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயினுடனும் கைது செய்தனர்.இதேவேளை, இவர்களிடம் இருந்து ஊசிகளையும் கைப்பற்றிய நிலையில் குறித்த நால்வருக்கு எதிராக  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.முதற்கட்ட விசாரணைகளில் குருநகர் பகுதியில் இருந்து ஹெரோயின் கொள்வனவு செய்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பிலிருந்து தெரியவருகிறது.

Advertisement

Advertisement

Advertisement