நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கை, ஜூன் மாதம் வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டி, சட்டமா அதிபரால் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதேவேளை, இந்த வழக்கை ஜூன் 27 ஆம் திகதி விசாரணைக்கு முன்னரான கலந்துரையாடலுக்கு அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான மோசடி வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கை, ஜூன் மாதம் வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கையில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டி, சட்டமா அதிபரால் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.இதேவேளை, இந்த வழக்கை ஜூன் 27 ஆம் திகதி விசாரணைக்கு முன்னரான கலந்துரையாடலுக்கு அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.