• Nov 07 2025

முள்ளிப்பொத்தானையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்!

shanuja / Oct 7th 2025, 4:23 pm
image


கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன்  மருத்துவ முகாம்  இன்று (07) முள்ளிப்பொத்தானை அக்ரபோதி விகாரையில் நடைபெற்றது.


இதில் சிரேஷ்ட ஆயுர்வேத வைத்திய நிபுணர், தேர்ச்சி பெற்ற ஆயுர்வேத வைத்தியர்களும்  கலந்து கொண்டு சிகிச்சையளித்தனர்.


மருத்துவ முகாமில் பின்வரும் சிகிச்சை முறைகள் இடம்பெற்றன.


1)  சீனி நோயிக்கான இரத்த பரிசோதனை , ஆலோசனை


2) சிறுநீரக வியாதிற்கான விஷேட வைத்திய சிகிச்சை முறைகள், ஆலோசனை


3) பக்கவாதம் , முழங்கால் வலி ,முதுகு வலி , இடுப்பு வலி , தசை பிடிப்பு  போன்ற நோய்களுக்கான விஷேட  வைத்திய சிகிச்சை 


4) அக்கியுபஞ்சர், கப்பிங், பத்து கட்டுதல், சீனி வியாதிக்கான நாட்பட்ட காயங்களுக்கான மருந்து கட்டுதல் போன்றவற்றுக்கான சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டன. 


இதில் பெரும்பாலான பொது மக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகளை இலவசமாக பெற்றனர்.



முள்ளிப்பொத்தானையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன்  மருத்துவ முகாம்  இன்று (07) முள்ளிப்பொத்தானை அக்ரபோதி விகாரையில் நடைபெற்றது.இதில் சிரேஷ்ட ஆயுர்வேத வைத்திய நிபுணர், தேர்ச்சி பெற்ற ஆயுர்வேத வைத்தியர்களும்  கலந்து கொண்டு சிகிச்சையளித்தனர்.மருத்துவ முகாமில் பின்வரும் சிகிச்சை முறைகள் இடம்பெற்றன.1)  சீனி நோயிக்கான இரத்த பரிசோதனை , ஆலோசனை2) சிறுநீரக வியாதிற்கான விஷேட வைத்திய சிகிச்சை முறைகள், ஆலோசனை3) பக்கவாதம் , முழங்கால் வலி ,முதுகு வலி , இடுப்பு வலி , தசை பிடிப்பு  போன்ற நோய்களுக்கான விஷேட  வைத்திய சிகிச்சை 4) அக்கியுபஞ்சர், கப்பிங், பத்து கட்டுதல், சீனி வியாதிக்கான நாட்பட்ட காயங்களுக்கான மருந்து கட்டுதல் போன்றவற்றுக்கான சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டன. இதில் பெரும்பாலான பொது மக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகளை இலவசமாக பெற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement