திருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரை ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ்களின் நேரத்தை சுழற்சி முறையிலான நேரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (07) ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தனியார் பஸ் உரிமையாளர்கள்,சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கிழக்கு கரையோரப் பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது 10ற்கும் மேற்பட்ட தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடாமல் ஆளுநர் செயலகத்தின் முன்பாக தரித்து நிறுத்தப்பட்டு தமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் சேவையில் ஈடுபடப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியதை அடுத்து இன்றையதினம் நடைமுறைப்படுத்தப்படவிருந்த சுழற்சி முறையிலான நேர அட்டவணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு தொடர்ந்தும் ஒருங்கிணைந்த நேர அட்டவணையின் படி சேவையில் ஈடுபடுமாறு தெரிவிக்கப்பட்டது.
குறித்த நேர அட்டவனை தொடர்பாக ஏனைய மாகாணங்களில் 150 கிலோமீற்றர் தூரம் பயணிக்கும் பேரூந்துகள் பின்பற்றுகின்ற நேர அட்டவணை மற்றும் அதன் சாதக, பாத விடயங்கள் தொடர்பில் ஆராந்து எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் மீண்டும் சேப்சுவார்த்தை நடாத்தி இறுதி முடிவு எட்டப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டதையடுத்து தனியார் பேரூந்து உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
எனவே நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கின்ற அதேபோன்று ஏனைய இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி தமது பேரூந்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சங்கத்தினர் மேலும் கோரிக்கை விடுத்தனர்.
உரிய தீர்வு கிடைக்காவிடின் சேவையில் ஈடுபடமாட்டோம்; நேரமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ் சாரதிகள் ஆர்ப்பாட்டம் திருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரை ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ்களின் நேரத்தை சுழற்சி முறையிலான நேரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (07) ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தனியார் பஸ் உரிமையாளர்கள்,சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்கிழக்கு கரையோரப் பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது 10ற்கும் மேற்பட்ட தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடாமல் ஆளுநர் செயலகத்தின் முன்பாக தரித்து நிறுத்தப்பட்டு தமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் சேவையில் ஈடுபடப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்பின்னர் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியதை அடுத்து இன்றையதினம் நடைமுறைப்படுத்தப்படவிருந்த சுழற்சி முறையிலான நேர அட்டவணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு தொடர்ந்தும் ஒருங்கிணைந்த நேர அட்டவணையின் படி சேவையில் ஈடுபடுமாறு தெரிவிக்கப்பட்டது. குறித்த நேர அட்டவனை தொடர்பாக ஏனைய மாகாணங்களில் 150 கிலோமீற்றர் தூரம் பயணிக்கும் பேரூந்துகள் பின்பற்றுகின்ற நேர அட்டவணை மற்றும் அதன் சாதக, பாத விடயங்கள் தொடர்பில் ஆராந்து எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் மீண்டும் சேப்சுவார்த்தை நடாத்தி இறுதி முடிவு எட்டப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டதையடுத்து தனியார் பேரூந்து உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.எனவே நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கின்ற அதேபோன்று ஏனைய இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி தமது பேரூந்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சங்கத்தினர் மேலும் கோரிக்கை விடுத்தனர்.